Feature ,
8 இலட்சம் ரூபா பொருட்களுடன் 4 பேர் கைது
Posted by
Puththelil
Published on
Tuesday, July 21, 2015
( நளின் )
புத்தளம் பொலிஸ் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள வீடுகள், பண்ணைகளில் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மற்றும் பொருட்களை திருடியதாகக் கூறப்படும் நால்வரை புத்தளம் கோட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட பொருட்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் 35 ரூபா பெறுமதியான 17 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டி 2, பற்றரிகள் 4 உட்பட மேலும் பல்வகை பொருட்களும் அடங்கி இருந்தன.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் புத்தளம் பாலாவி வன்னதீவு பகுதியைச் சேர்ந்த இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருடப்பட்ட பொருட்கள் விற்கப்பட்ட இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

0 comments
Readers Comments