<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பிள்ளைகளை சேர்க்கக் கோரி புத்தளம் மற்றும் பள்ளமவில் ஆர்ப்பாட்டம்

( முஸ்பிக், நமாஸ் )
புத்தளம் 

தமது பிள்ளைகளை முதலாம் தரத்தில்  சேர்கக் கோரி சாலியவெவ பாடசாலை பெற்றோர் இன்று காலை புத்தளம் வலயக் கல்வி காரியாலய்த்திற்கு முன்னாள் அமைதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.


புத்தளம் கல்வி வலயத்திட்குற்பட்ட  சாலியவெவ மகா வித்தியாலயம் 1000 பாடசாலை திட்டத்திற்குள் உள் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து தரம் 01க்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  2015ஆம் ஆண்டுக்காக 80 மாணவர்கள் தரம் 01க்கு சாலியவெவ பாடாசாலையில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இந்த மாணவர்களை  சாலியவெவ பாடாசாலையில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறியே பெற்றோர் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
 
 
 
 
 
 
 
 
( ஜூட் சமந்த  )
பள்ளம  


ஆனமடு பள்ளம நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள   எஸ்.டீ.ஆர். ஜயரத்ன ஆரம்ப பாடசாலையில்   தமது பிள்ளைகளை தரம் ஒன்றில் சேர்க்கக் கோரி .புத்தளம் ஆனமடு வீதியை மறித்து இன்று ஆர்ப்பட்டமொன்று இடம் பெற்றது.
ஆனமடு பள்ளம நந்தமித்ரா மகா வித்தியாலயம் 1000 பாடசாலை வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்ப பிரிவு அங்கிருந்து அகற்றப்பட்டது. ஆரம்ப பிரிவிற்காக  பள்ளம நகரில் எஸ்.டீ.ஆர். ஜயரத்ன என்ற புதிய பாடசாலையொன்று  ஆரம்பிக்கப்பட்டது. நந்தமித்ரா மகா வித்தியாலயத்திற்கு விண்ணப்பித்தவர்கள் புதிய பாடசாலைக்கு உள்வாங்கப்படுவர் என்று அதிகாரிகளால்  அறிவிக்கப்பட்டது.  எனினும் இந்த வருடத்திற்காக 40 மாணவர்களுக்கே அனுமதி கிடைத்துள்ளது.எனைய மாணவர்கள் வேறு பாடசாலைக்கு விண்ணப்பிக்காததால் அவர்களையும்  பாட்சாலையில் சேர்க்குமாறு கோரி  பெற்றோர் ஆர்ப்பட்டடத்தில் ஈடுபட்டனர்.
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors