கட்டுரை ,
பெருநாளை எளிமையாக கொண்டாடுவோம்
Posted by
Puththelil
Published on
Wednesday, July 23, 2014
புத்தெழில் ஆசிரியர் தலைப்பு ( 16 - 31.07.2014 )
ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதற்குப் பரிசாகக் கிடைக்கும் நோன்புப் பெருநாளை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றௌம்.
வழமை போன்று புத்தளம் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு மிகவும் ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் ஆர்வத்து டன் நோன்பை நோற்று பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவுள்ள சமயம் நமது நாட்டிலும் உலக நாடுகளிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் கள் நோன்பு நோற்பதற்கு வசதியின்றி பெருநாளை கொண்டாடுவதற்கும் வசதிகளின்றி பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த வண்ணம் உள்ளனர்.
நமது நாட்டில் அண்மையில் பேருவளை, அளுத்கம போன்ற பகுதிகளில் இடம் பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக இன்றும் வழமைக்குத் திரும்பாதவர்கள் ஒரு புறம், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, அடாவடித் தனம் காரணமாக நிமிடத்திற்கு நிமிடம் உயிரிழக்கும் பலஸ்தீன மக்கள் ஒரு புறம். மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் என்று முஸ்லிம் சமூகம் இன்று முழு உலகிலும் துன்பத்தில் வாழும் நிலையில் நாம் மட்டும் எவ்வாறு சந்தோமாக பெருநாளைக் கொண்டாட முடியும்.
பெருநாளைக்காக நாம் பற்ற வைக்கும் பட்டாசுகளை எண்ணும் போது இஸ்ரேலின் துப்பாக்கி வேட்டுக்கள் மனக் கண்முன்னே தெரிகிறது. பெருநாளைக்காக நாம் அணியவுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட புத்தாடைகளை எண்ணும் போது பலஸ்தீனர்களின் கபன் ஆடைகளும் இரத்தம் படிந்த ஆடை களும் கண் முன் தோன்றுகின்றன. அளவுக்கதிகமான உணவுகளை பெருநாளைக்குத் தயாரிக்கும் எம்மவர்களை எண்ணும் போது யுத்தம் காரணமாக பட்டினியால் வாடும் பச்சிளம் பாலகர்களின் அழுகுரல் காதுகளில் ஒலிக்கின்றன.
ஆசிரியர் தலைப்பு எழுதப்படும் வரை பலஸ்தீனில் 220 பேர் ஹீதாகியுள்ளனர். அதில் 48 சிறுவர்கள் 33 பெண்கள் 13 முதியோர் 126 ஆண்கள் அடங்குவர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 1,580 பேர் காயமடைந்துள்ளனர். 1,920 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பேருவளை, அளுத்கம பிரதேசங்களில் இடம் பெற்ற அசம்பா விதங்கள் காரணமாக மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்பாத மக்களின் நிலை. இவ்வாறெல்லாம் பார்க்கும் போது நம்மால் சந்தோமாக பெருநாளை கொண்டாட முடியுமா?
ஒரு முஸ்லிமிற்கு துன்பம் ஏற்படும் போது அடுத்த முஸ்லிம் எவ்வாறு சந்தோமாக இருக்க முடியும். புத்தளம் மக்கள் என்றும் எதிலும் பின் நிற்கமாட்டார்கள் என்று ஆணித்தரமாக கூற முடியும். பேருவளை அளுத்கம பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி உதவிகளை வழங்கியுள்ளனர். அது மாத்திரமின்றி மருத்துவ சேவைகள், ஆலோசனை சேவை என்று தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஜேர்மன் நாட்டு கால்பந்தாட்ட வீரர் மஸ்ஊத் ஓதேல் தனக்குக் கிடைத்த பரிசுத் தொகை யில் ஐந்து இலட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு அனுப்ப உள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் விளையாடியதற்காக தமது அணிக்குக் கிடைத்த ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலரை காஸாவில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அல்ஜீரியா உதைப்பந் தாட்ட அணி வழங்க தீர்மானித்துள்ளது.
இவ்வாறு நம்மவர்கள் மட்டுமன்றி உலக நாடுகளிலுள்ள முஸ்லிம்களும் உதவிகளை அள்ளி வழங்கி வருகின்றனர். எனவே எதிர்நோக்கும் நோன்புப் பெருநாளை ஆடம்பரங்களைக் குறைத்து வீண் விரயங்க ளைத் தவிர்த்து கேளிக்கைகளை துறந்து எளிமையான முறையில் கொண்டாடுவோம். துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்காக பெருநாள் இரவிலும் பெருநாள் தினத்திலும் அல்லாஹ்விடம் பிரார்த்திப் போம்.

0 comments
Readers Comments