<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

விபத்தில் சிறுவன் பலி, 5 பேர் காயம்

( ஜூட் சமந்த, நளின் )
புத்தளம் பெளத்த மத்திய நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்ததோடு 5 பேர் காயத்திற்குள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களனியிலிருந்து மடுவிற்கு வழிபாட்டு பிரயாணம் மேற் கொண்டவர்கள் காலை உணவிற்காக புத்தளம் பெளத்த மத்திய நிலையத்திற்கு அருகில் தமது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அவ் வழியே வந்த லொரியோன்று குறித்த வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விபத்து  காரணமாக மடுவிற்கு வழிபாட்டு பிரயாணம் மேற் கொண்டவர்களின் வாகனத்தில் பயணித்த 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்ததோடு 5 பேர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
 
 
 
   

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors