<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஆறுகள் பெறுக்கெடுத்து நீர்த்தேக்க வான் கதவுகளும் திறப்பு



தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை  காரணமாக ஆறுகள் பெறுக்கெடுத்துள்ளதுடன் நீர்த்தேக்க வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

இன்று மாலை முதல்  தெதுரு ஓயா நீர் மட்டம் கடல் மட்டத்தினை விட  உயர்ந்துள்ளது. தெதுறு ஓயாவிற்கு அருகிலுள்ள தற்காலிக வீடுகள் இரண்டு நீரினால் மூழ்கியுள்ளன.

ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நான்கு திறக்கப்பட்டுள்ளன. தப்போவா நீர்தேக்க நீர் மட்டம் 16 அடிகள் உயர்ந்துள்ளன. கலாஓய நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் புத்தளம் மன்னார் போக்குவரத்துக்கு எழுவன்குளம் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கினிமிடி நீர்த்தேக்கத்தின்  வான் கதவுகளும்  இன்று மாலையில்  திறக்கப்பட்டுள்ளன.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors