<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் ட்ரகன்ஸ் ப்ரீமியர் லீக் 2014

(அஸாம் அஸீஸ்)
புத்தளம் ட்ரகன்ஸ் (Puttalam Dragons) அணியினால் புத்தளத்தைச் சேர்ந்த 11 அணிகளுக்கிடையில் ப்ரீமியர் லீக் (Premier League) போட்டிகள் கடந்த வெள்ளிக் கிழமை (16.05.2014) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொத்தமாக 55 லீக் போட்டிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு இரண்டு போட்டிளாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாட்டக்காரர் விருது வழங்கப்படும்.

போட்டிகளை ட்ரகன்ஸ் அணி உரிமையாளர் ரிஸபாக் மற்றும் புத்தளம் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
 
 
வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் ஜூவனெல்  (Juvenile) அணியும் ஹைபை (HiFi) அணியும் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் போட்டியே சமநிலையில் முடிவுற்றது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது. சிறப்பாக சகலதுறையிலும் செயல்பட்ட ஹைபை அணியின் ருக்கான் ஆட்டநாயகன் விருதை பெற்றுக் கொண்டார்.

 இரண்டாவது போட்டி நாகாஸ் (Nagas) அணிக்கும் ட்ரகன்ஸ் B (Dragons B) அணிக்கும் நடைபெற்றது. அதில் ட்ரகன்ஸ் B அணி வெற்றியீட்டியது. ஆட்டநாயகன் விருதை ட்ரகன்ஸ் அணி ஹாலி்த் தட்டிச்சென்றார்.

சனிக்கிழமை (17.05.2014) முதல் போட்டியாக ப்லாஸ்டர்ஸ் ( Blasters )அணிக்கும் அல்மதீனா ( Al Madeena ) அணிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் அல் மதீனா அணி வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக நஸ்வர் தெரிவு செய்யப்பட்டார்.




அடுத்து நடைபெற்ற போட்டி சிட்டி கெலக்ஸி மற்றும் சன் ரைஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் சன் ரைஸ் அணி வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக சன்ஜய் தெரிவானார்.
 






0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors