<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளத்தில் முதலாவது முஅத்தின் சமாதான நீதவான்

அஹமது கபீர் அபூதாலிப் (வயது 61) புத்தளம் மாவட்ட சமாதான நீதவானாக சத்திய பிரமானம் செய்து கொண்டார்.

அபூதாலிப் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை, ஆண்கள் கலவன் பாடசாலை, ஸாஹிரா மத்திய கல்லூரி என்பவற்றில் பழைய மாணவராவார். இவர் சமூக சேவையில் அதிக ஈடுபாடுடையவர். தற்போது மரைக்கார் வீதி அபிவிருத்தி அமைப்பு கடன் பிரிவின் பொருளாலராகவும் புத்தளம் பிரஜைகள் குழு உறுப்பினராகவும் மணல்குன்று பைதுஸ் ஸகாத் கிராம அபிவிருத்தி சங்க தலைவராகவும் தமது சமூக பணிகளை ஆற்றி வருகின்றார்.

இப்ராஹீம் நெய்னா அஹமது கபீர் ஜலால்தீன் உம்மு நஸீதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரான அபூதாலிப் 06-02-2000 முதல் புத்தளம் மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜிதில் முஅத்தினாக கடமை புரிந்து வருகின்றார். புத்தளம் நகரில் முதலாவது முஅத்தின் சமாதான நீதவான் என்ற பெயரை அபூதாலிப் பெற்றுக்கொண்டார்

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors