Feature தேசிய செய்திகள் ,
கரம்பை விபத்தில் இருவர் உயிரிழப்பு 31 பேர் காயம்
Posted by
Puththelil
Published on
Friday, October 18, 2013
( ஆஸாத் )
புத்தளம் கற்பிட்டி வீதி கரம்பை பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் 31 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று மாலை 4.30 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. தலவில தேவாலயத்தில் மதக் கிரியைகளை நிறைவு செய்து விட்டு கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கரம்பையிலிருந்து கல்பிட்டி நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றும் விபத்துக்குள்ளாகியதாலேயே இந்த உயிரிழப்பும் காயங்களும் ஏற்பட்டுள்ளன.
வேனில் பயணித்த சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய நிலாந்தி தில்ருக்ஸி, லொறியில் பயணித்த கரம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அப்துல் முனாப் ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாகும். காயமடைந்தவர்களில் 19 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவர். காயமடைந்தவர்களில் ஒரு பாதிரியாரும் அடங்கியுள்ளார். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

0 comments
Readers Comments