புத்தளம் தேர்தல் களம் ,
தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்
Posted by
Puththelil
Published on
Saturday, September 21, 2013
( அப்துல் நமாஸ் )
இன்று நடைபெற்ற வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது புத்தளம் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதே வேளை வாக்களிப்பு நிலையங்களிலிருந்து சகல வாக்குப் பெட்டிகளும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. சென். அன்றூஸ் கல்லூரியில் புத்தளம் மற்றும் ஆனமடு தொகுதிகளுக்கான வாக்குகளும் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் வென்னப்புவ மற்றும் சிலாபம் தொகுதிகளுக்கான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. அதே வேளை நாத்தாண்டி மற்றும் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வாழும் வாக்காளர்களின் வாக்குகள் செய்னம்ப் கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் 51 சத வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் புத்தளம் மாவட்ட செயலகப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 comments
Readers Comments