<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பூக்குளத்தில் 30 வருடங்களின் பின்பு மீண்டும் வாக்குச்சாவடி

( அப்துல் நமாஸ் )
வடமேல் மாகாண சபை தேர்தலுக்காக பூக்குளம் மீனவர் கிராமத்தில் சுமார் 30 வருடங்களின் பின்பு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

புத்தளம் தொகுதியிலுள்ள வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறுதி எல்லைக் கிராமமே பூக்குளம் மீனவர் கிராமமாகும். யுத்த சூழ் நிலை காரணமாக கல்பிட்டி பிரதேசத்தில் இடம் பெயர்ந்து வாழ்ந்த பூக்குளம் மக்கள் தேர்தல் காலங்களில் கல்பிட்டியில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து வந்தனர். நாட்டில் சமாதான சூழ் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இடம் பெயர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் பூக்குளத்தில் வாழும் சூழல் உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பூக்குளம் கிராமத்தில் வாக்களிப்பு நிலையம் இம் நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபை தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளது. பூக்குளம் கிராமத்தில் 261 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors